Friday, 5 January 2018

ராசி அதிபதி பொருத்தம்...!!

ராசி அதிபதி பொருத்தம்...!!

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். இராசியதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

பனிரெண்டு ராசிகளுக்கும் அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்ற உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

பெண் ராசிக்கு ஆண் ராசி அதிபதி நட்பு என்றால் உத்தமம். சமம் என்றால் மத்திமம். பகையானால் பொருந்தாது. ராசி அதிபதி பொருத்தம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே ராசி அதிபதி அல்லது ராசி அதிபதிக்குள் நட்பு இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உள்ளது. பகை அதிபதிகளாக இருந்தால் பொருத்தம் இல்லை. ஆண் மற்றும் பெண் ராசியை பார்க்க, தங்கள் அதிபதிகளுக்குள் நட்பு அல்லது நடுநிலை இருக்க வேண்டும். இந்த அம்சம் 
குழந்தை பாக்கியத்தை உண்டாக்கும்.

ஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சமசப்தம ராசிகளில் இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை. பெண்கள் மற்றும் ஆண்கள் பிறந்த ராசியில் உள்ள அதிபதியின் ஒற்றுமையே இந்த பொருத்தத்தை குறிக்கின்றது.

இராசியதிபதி பொருத்தம் என்பது நீண்ட ஆயுள் மற்றும் தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகளின் அதிர்ஷ்டம் போன்ற தகுதிகளை குறிக்கின்றது. சில சமயங்களில் இராசியதிபதியின் ஒற்றுமை இல்லாவிடில், ஜாதகத்திலுள்ள சமசப்தம் ஒற்றுமை மற்றும் மகேந்திர பொருத்தமும் இந்த குறையை தீர்க்கும்.

உதாரணமாக, பெண்ணின் இராசி அதிபதி சந்திரன். ஆணின் இராசி அதிபதி சனி என்றால், இவர்களுக்கு ராசிஅதிபதி பொருத்தம் திருப்திகரமாகும்.
ஒரு ராசியின் சொந்தகாரர் தனது ராசியில் தனியாக (வேறு கிரக சேர்க்கை இல்லாமல்) தங்கி இருக்கும்போது அதிக பலமுடனும், தனது ஸ்தானத்திற்கு நல்ல பலன்களை அள்ளி தரும்.

ராசி அதிபதி, நட்பு, பகை கிரகம் :

மேஷம், விருச்சிகம் :
அதிபதி - செவ்வாய்
நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், குரு
பகை கிரகம் - புதன்

மிதுனம், கன்னி :
 
அதிபதி - புதன்
நட்பு கிரகம் - சூரியன், சுக்கிரன்
பகை கிரகம் - சந்திரன்

தனுசு, மீனம் :
 
அதிபதி - குரு
நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் - சுக்கிரன்

ரிஷபம், துலாம் :
 
அதிபதி - சுக்கிரன்
நட்பு கிரகம் - புதன், சனி
பகை கிரகம் - சூரியன், சந்திரன்

மகரம், கும்பம் :
 
அதிபதி - சனி
நட்பு கிரகம் - புதன், சுக்கிரன்
பகை கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

கடகம் :
 
அதிபதி - சந்திரன்
நட்பு கிரகம் - சூரியன், புதன்

சிம்மம் :
அதிபதி - சூரியன்
நட்பு கிரகம் - சந்திரன், செவ்வாய், குரு
பகை கிரகம் - சுக்கிரன்

ராகு கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது.
இப்பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும். பொருத்தம் மத்திமம் எனில் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.