Monday, 29 January 2018

தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருகிறது... என்ன செய்யலாம்?

தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருகிறது... என்ன செய்யலாம்?

தைப்பூசம் :

⭐ ஜனவரி மாதம் 31ம் தேதி தைப்பூசம், பௌர்ணமி, சந்திர கிரகணம் ஆகிய மூன்றும் ஒன்றாக வருகிறது. தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் இதை அறிந்து பலரும் வியப்படைந்து உள்ளனர். தைப்பூசம், முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆனால், இந்நாளிலே சந்திர கிரகணம் வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

⭐ தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் அன்றைய நாளில் கோவில் திறக்கப்படுமா? என்று பலரின் மனதிலும் கேள்வி எழும்பியுள்ளது.

⭐ சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் முக்கிய பங்களிக்கின்றன. கிரகண காலங்களில் ஆலயங்கள் முடப்பட்டு வருகின்றன. சூரிய மற்றும் சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் கிரகண காலங்களில் பூமிக்கு வருவது தடைபடுகிறது. ஆகையால் கிரகண காலங்கள் உகந்த காலங்களாக கருதப்படாத காரணத்தினால் ஆலயங்கள் அந்த நேரங்களில் மூடப்பட்டுவிடுகின்றன.

⭐ இம்முறை தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் பெரும்பாலும் கோவில்கள் மூடப்பட்டிருக்கும். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி மற்றும் வேண்டுதல்களை செலுத்த வேண்டிய பக்தர்கள், காலை நேரத்திலே வேண்டுதல்களை நிறைவேற்றுவது நல்லது. மாலை வேளையில் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அனைத்து கோவில்களும் நடைசாத்தப்படும்.

⭐ சந்திர கிரகண வேளையில் சுவாமி வீதி மற்றும் சுவாமி ரத ஊர்வலம் நடைபெறாது. கிரகண நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது சிறப்பு.

⭐ சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 31ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.

⭐ இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. 9.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பு+ஜைகள் நடத்தப்படும். 

⭐ தொடர்ந்து இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

⭐ சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது. வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.





















⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛