Tuesday, 30 January 2018

அளவுக்கு அதிகமான பணவரவை உண்டாக்கும் யோகம்.!

அளவுக்கு அதிகமான பணவரவை உண்டாக்கும் யோகம்.!



யோகங்களும் அதன் பலன்களும்..!
👉 வெளிநாடு செல்லும் யோகம் :
✴ ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் கடகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வீடுகளில் இடம் பெற்றோ அல்லது ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் பலம் பெற்று இருப்பினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
👉 வெளிநாடு செல்லும் யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
✴ ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகளின் திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
👉 குபேர யோகம் :
✴ இரண்டாம் அதிபதி ஒன்பதில் இருப்பினும் அல்லது இரண்டாம் வீட்டில் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் அதிபதி அமைவதால் உண்டாவது குபேர யோகம் ஆகும்.
👉 குபேர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
✴ அளவுக்கு அதிகமான தனவரவு உண்டாகும்.
👉 ஞாபக மறதி யோகம் :
✴ ஐந்தாம் அதிபதி மறைவு வீடுகளில் இருந்தாலோ அல்லது ஐந்தாம் அதிபதி பலம் இழந்தாலோ உண்டாவது ஞாபக மறதி யோகம் ஆகும்.
👉 ஞாபக மறதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
✴ உடனுக்குடன் எதையும் மறந்துவிடும் இயல்புடையவர்கள்.

  யோகங்கள் நாளையும் தொடரும்....