சாதுர்யமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான் !!கன்னி ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். புதன் இங்கு ஆட்சி பெறுவது மட்டுமல்லாமல், உச்சமும் அடைகின்றார். அதனால் அவரின் பலமும் அதிகரிக்கின்றது. இதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

எளிதில் மற்றவர்களை கவரும் தோற்றமும், ஈர்க்கும் அமைப்பையும் கொண்டவர்கள்.

எந்த நிலையானாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நல்ல உள்ளமும், எண்ணமும் உடையவர்கள்.

இனிமையான குரல் வளம் உடையவர்கள்.

எதிரிகளையும் திருத்தி தன் வசம் வைத்துக்கொள்ளும் சாதுர்த்தியசாலிகள்.

எதிலும் பெருந்தன்மையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

தர்ம சிந்தனையும், தானம் செய்வதிலும் ஈடுபாடு உடையவர்கள்.

சிந்தித்து செயல்படுபவர்கள். தவறுகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

எடுத்த செயலில் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு அறிந்தவர்கள்.
சூழ்நிலைக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என எண்ணக்கூடியவர்கள்.

தன்னைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.

ஆன்மீக பணிகளுக்கு செலவு செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

கௌரவமின்றி எந்த தொழிலாக இருந்தாலும் செய்யக்கூடியவர்கள். ஆனால், கௌரவம் குறையாத படி நடந்து கொள்ளக்கூடியவர்கள்.

தனது வெற்றிக்கான ரகசியத்தை எவரிடமும் பகிரமாட்டார்கள்.

விகடகவியாகவும், சாதுர்யமாகவும் பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
தொடரும்...!