வலது முழங்காலில் மச்சமிருந்தால் என்ன பலன்?
1. எனக்கு 5ல் கேது, 9ல் சுக்கிரன், 11ல் புதன் மற்றும் 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

வியாபாரத்தில் பல வகையில் இலாபம் உண்டாகும்.

வசதியான வாழ்க்கை வாழ்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.

விரயச் செலவுகள் அதிகம் செய்யக்கூடியவர்கள்.

அவசர செயல்களால் தன் பெயரை தானே கெடுத்துக்கொள்ளக் கூடியவர்கள்.
2. கும்ப லக்னத்தில் புதன், சூரியன், சனி மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

எடுத்த காரியத்தை வைராக்கியத்துடன் செய்து முடிப்பவர்கள்.

இனிமையான பேச்சுகளை கொண்டவர்கள்.

எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.

அலைச்சல் அதிகம் உடையவர்கள்.
3. நான் கும்ப லக்னம். 2ல் குரு, புதன், சூரியன் சேர்ந்துள்ளது. எனக்கு குரு திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

பொருளாதாரம் மேன்மை அடையும்.

பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
4. சனி திசை பலன் தருமா?

நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் அதற்கு உண்டான சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் சனிபகவான்.

சனி திசை நடக்கும்போது நாம் சுப வினைகள் செய்திருப்பின் சுப பலன்கள் மிகுதியாகவும், பாவச் செயல்கள் செய்திருப்பின் அதற்கு ஈடான அசுப பலன்களையும் அளிக்க வல்லவர்.
5. நான் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். எனக்கு தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி, வீட்டிலுள்ள இறைவனை வெளியே செல்லும் போது வணங்கிவிட்டு செல்லவும்.

புதன்கிழமையும், சனிக்கிழமையும் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாளை வழிபட்டு வரவும்.
6. ஆண்களுக்கு வலது முழங்காலில் மச்சமிருந்தால் என்ன பலன்?

ஆண்களுக்கு வலது முழங்காலின் மேல் பக்கமாய் மச்சம் இருந்தால் அவர்கள் எதிலும் நேர்மையும், ஒழுக்கமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
7. நான் அணிந்துள்ள பச்சை கல் பதித்த தங்க மோதிரத்தில், பச்சை கல் மட்டும் காணாமல் போனது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

எதிர்பார்த்த சுபச் செய்திகள் காலதாமதமாக கிடைக்கும்.

உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.