Wednesday, 5 June 2019

தசாபுத்தி : இவர்களுக்கு குடும்ப பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும்...!!

தசாபுத்தி : இவர்களுக்கு குடும்ப பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும்...!!
மிதுன லக்னக்காரர்களுக்கு கேது திசை நடந்தால் உண்டாகும் பலன்கள் !!

🌟 மிதுன லக்னத்தின் அதிபதி புதன்பகவான் ஆவார். புதன்பகவானுடன், கேதுபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
🌟 எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.
🌟 குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
🌟 உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும்.
🌟 குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
🌟 புதிய இலட்சியம் மற்றும் கனவுகளை உருவாக்குவீர்கள்.
🌟 எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.
🌟 நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.
🌟 ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
🌟 தொழில் திறமை மேம்படும்.
🌟 நீர்நிலை சார்ந்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம் :
🌟 கேது திசை நடப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
🌟 மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.