Wednesday 5 June 2019

வீடு எந்த திசையில் இருக்க வேண்டும்? கோடிகளை தேடித்தரும் அமைப்பான வீடு எது?

வீடு எந்த திசையில் இருக்க வேண்டும்?
கோடிகளை தேடித்தரும் அமைப்பான வீடு எது?



🏡உங்கள் வாழ்க்கையில் வீடு, பொருள், நிம்மதி அனைத்தும் அமைய உங்கள் வீடு இயற்கையோடு இயற்கையாக அமைந்து இருக்க வேண்டும்.
ஒரு வீடு எந்த திசையில் இருக்க வேண்டும்?
🏡பொதுவாக மக்கள் விரும்புவதெல்லாம் வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல்.
🏡நமது எண்ணப்படி மனை அமைந்தால் நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் உச்ச வாசல் சிறப்பானதொரு அமைப்பை ஏற்படுத்தும்.
🏡உச்ச வாசலை வடக்கு பக்கம் அமைத்துக்கொள்ளலாம்.
🏡கிழக்கு பக்கமாகவும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், வசந்தம் நம் வாழ்வில் குறைவில்லாமல் இருக்க குறிப்பாக கோடிகள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் மனை மட்டும் அமைந்துவிட்டால் போதாது.
🏡ஒரு மனையில் கட்டப்படும் வீட்டில் அமைக்க வேண்டிய வாசல், அறைகளின் அமைப்பு, நான்கு பக்கமும் அமைக்கப்படும் சுற்றுச்சுவர் இவற்றையெல்லாம் சிறப்பாக அமைக்க வேண்டும்.
🏡மேலும், அந்த மனையின் பார்வை அல்லது தெருக்குத்து போன்றவை குறைவொன்றும் இல்லாத நிறைவான செல்வத்துடனும், ஆரோக்கியத்துடனும், ஆனந்தத்துடனும் வாழ அந்த வீட்டின் அமைப்பு வழிவகுக்கும்.
🏡இதில் எந்த தெருக்குத்து சிறந்தது என்பதை நன்கு கற்றறிந்த வாஸ்து நிபுணர்களால் மட்டுமே உங்களுக்கு தெளிவுப்படுத்த முடியும்.
🏡இதுபோன்ற ஒரு வீட்டில் நீங்கள் வாழும்போது எண்ணிய செயல்கள் எளிதாக உங்களை வந்தடைய இயற்கை என்றென்றும் உங்களுக்கு துணை இருக்கும். தடைகள் ஏதும் வராது.
🏡உழைப்பிற்கு ஏற்ற உயர்வு இல்லையே என ஏங்குபவர்களும், கிள்ளி கொடுக்கும் எண்ணம் இருப்பவர்களும் இந்த அமைப்பில் இருந்தால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் வந்துவிடும்.
🏡வசந்த காலம் உங்கள் வாழ்நாளில் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் உங்கள் மனையை தேர்வு செய்வதற்கு முன்பே வாஸ்து நிபுணர்களை அணுகி தேர்வு செய்து பின் வாஸ்துப்படி வரைபடத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
🏡உங்கள் வாழ்வின் ஆனந்தத்தை வாஸ்து பார்த்து துவங்குங்கள்.