ஶ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் ஶ்ரீசுக ப்ரஹ்ம மஹரிஷி கூறும் சூரிய பகவானின் சிறப்பு, பெருமை மற்றும் செயல்கள் :-
🌞 சூரிய பகவான் சத்திய ஸ்வருபி.
🌞 முக்காலமும் உண்மையில் அனுஷ்டிக்கப்படும் கர்மங்களின் ஸ்வரூபம் ...
🌞 ருதம் என்கிற ரூபி; அதாவது நடைமுறையில் உள்ள கர்மங்களின் பயன்/ பலன் உருவாக இருப்பவர்.
🌞 சுப பலனான மோக்ஷத்திற்கு அதிபதி ...
🌞 அசுப பலனான ம்ருத்யுவிற்குத் தலைவர் ...
🌞 ப்ரம்ம ஸ்வரூபி ...
🌞 புராண புருஷர் ...
🌞 விஷ்ணு ஸ்வரூபர் ...
🌞 ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே பிரம்மாண்டத்தின் நடுவே சூரியன் இருக்கிறார் ...
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 25 கோடி யோஜனை. (ஒரு யோஜனை = 8 மைல்) ...
🌞 சூரிய பகவான், இறந்த அதாவது உணர்வு இல்லாத அண்டத்தின் மத்தியில் வைராஜனாக விளங்குவதால், அவருக்கு #மார்த்தாண்டன் ஏன்ற பெயர் உண்டாயிற்று ...
🌞 அவர் பொன் மயமான ஒளி மயமான பிரம்மாண்டத்திலிருந்து தோன்றியதால் #ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறார் ...
🌞 சூரியனால்தான் திசைகள், ஆகாயம், விண்ணுலகம், பூலோகம், ஸ்வர்க்கம், மோக்ஷம், நரகம், ரஸாதலம், மற்றுமுள்ள பல்வகைத்தான பூமி பாகங்கள் எல்லாம் பிரித்து அறியப்படுகின்றன ...
🌞 சூரிய பகவான்தான் தேவர்கள், விலங்கினங்கள், மனிதர்கள், ஊர்வன, செடி, கொடிகள், மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகள் ஆகிய அனைத்திற்கும் ஆத்மாவாகவும், கண்ணால் காணத்தக்க சக்தியாகவும் விளங்குகிறார் ...
🌞 இந்த ஆகாயம் நடுவேதான் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் அரசனான சூரிய பகவான் இருக்கிறார் ...
🌞 அவர் தன் ஒளியால் பிரகாசப் படுத்துகிறார். தனது வெய்யிலால் முன்று உலகங்களையும் கொளுத்துகிறார் ...
🌞 சூரியன் - #உத்தராயணம் - மெதுவாகச் செல்லுதல்; #தக்ஷிணாயணம் - வேகமாகச் செல்லுதல்; #விஷு - ஒரே சீராகச் செல்லுதல்; என்கிற மூன்று நடைகளிலும் 12 ராசிகளிலும் அந்தந்த காலங்களுக்கேற்ப ...
#ஆரோஹணம் - ஏறுமுகம்; #அவரோஹணம் - இறங்கு முகம்; #சமானம் - சமமாக இருத்தல்;
என்கிற வரிசையில் சென்று, பகல் இரவுகளைப் பெரிதாகவும் சிறிதாகவும் சமமாகவும் செய்கிறார் ...
🌞 சூரியனது வேதமே வடிவமான தேர் ஒரு முகூர்த்தத்தில், அதாவது 90 நிமிடங்களில் 34,00,800 யோஜனை தூரம் பயணித்து, நான்கு திசைகளிலும் சுற்றி வருகிறது ...
🌞 மானஸோத்தர கிரியில் உள்ள மேரு மலையின் ;
# கிழக்கு - இந்திரனின் நகரம் #தேவதானி;
# தெற்கு - யமனுடைய நகரம் #ஸம்யமனீ;
# மேற்கு - வருணனுடைய நகரம் #நிம்லோசனீ
# வடக்கு - சந்திரனுடைய நகரம் #விபாவரீ
இவற்றைச் சூரியன் சூற்றி வர 9,51,00,000 யோஜனை தூரம் பயணம் செய்ய வேண்டும் ...
இவற்றை அனுசரித்தே சூரியனின் உதயம், உச்சிநேரம், சந்தியாகாலம், இரவு முதலியன ஏற்படுகின்றன ...
இவற்றின்படியே அனைத்து ஜீவராசிகளின் செயல்பாடுகள் நடக்கின்றன ...
🌞 சூரிய பகவான் ரதத்தின் நுகத்தடியில்தான்
#காயத்ரீ;
#உஷ்ணிக்;
#அனுஷ்டுப்;
#ப்ருஹதீ;
#பங்க்தீ;
#த்ருஷ்டுப்;
#ஜகதீ;
என்கிற ஏழு சந்தஸ்ஸுகளின் பெயர் கொண்ட ஏழு குதிரைகள் #அருணன் என்கிற தேரோட்டியால் பூட்டப்பட்டுள்ளன ...
சூரிய பகவான் அமர்ந்துள்ள அந்தத் தேரை,
இந்த ஏழு குதிரைகளும்தான் இழுத்துச் செல்கின்றன ...
🌞 சூரிய பகவானுக்கு எதிரில் ஸ்வஸ்திவாசனம்/ நல்வாக்கு கூறுவதற்காகவே, பிரம்மதேவரால் நியமிக்கப்பட்ட கட்டைவிரலின் ஒரு கணு அளவே உயரம் உள்ள #வாலகியர்கள் என்கிற 60,000 மஹரிஷிகள் ஸ்தோத்திரம் செய்தபடி இருக்கிறார்கள் ...
🌞. இவர்களைத் தவிர ... ...
#ரிஷிகள்கந்தர்வர்கள்அப்சரஸ்கள்நாகர்கள்யட்சர்கள்ராட்சஸர்கள்தேவதைகள்;
என 14 வகையானவர்கள், இருவர் இருவராகச் சேர்ந்து இருப்பதால் ஸப்த (ஏழு) கணங்கள் என்று அழைக்கப் படுகிறார்கள் …
இவர்கள் ஆத்ம ஸ்வருபரான சூரிய பகவானை இருவர் இருவராகப் பூஜை செய்கிறார்கள் ...
🌞 இப்படி சூரிய பகவான் 9,51,00,000 யோஜனை சுற்றளவு உள்ள பூமண்டலத்தை, ஒரு நொடிக்கு 2,002 யோஜனைகள் வீதம் கடந்து செல்கிறார் ...
(ஒரு யோஜனை = 8 மைல்) ...
ஆதாரம் :-
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
Volume----2,
ஸ்கந்தம்----5,
அத்தியாயம்----20,
ஸ்லோகம்----5, 43, 44, 45,& 46.
அத்தியாயம்----21,
ஸ்லோகம்---3 to 19.
பக்கம்-----127 to 138.