Wednesday, 1 July 2020

ராம ராம ராம ராம || ஆன்மிக செய்திகள் | ஆன்மிக தகவல்கள் / Bhakthi Vlog

ராம ராம ராம ராம


ராம  நாமா'  சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது  காற்றில்
பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை நோய்க்கிருமிகளை  அழித்துவிடும்







சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு அவைகளும்  மிக உயர்ந்த பிறவிகளை  பெறலாம்.  இதுவும் சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது முந்தய பிறவிகளில்  நாமும்  'ராம நாமா'  கேட்டு கேட்டு  இப்போதைய பிறவியினை  பெற ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்
மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.  
எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம நாமாவில் அடங்கும்.  எல்லாவித நோய்களுக்கும்  'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .


எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும் 'ராம நாமா'    சொல்லலாம்.  எங்கும் உணவு உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது   நாமாவும்  ஒன்றே!  


ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய்,  பொறாமை , சூது,  போன்ற தீய  குணங்களின்  தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான   ராமரின்  குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ  தத் பவதி'--எதை  நினைக்கிறாயோ அதுவே  ஆகிறாய்!) 


 'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .
ராம  நாமா'  மட்டுமே  நன்மையே கொண்டு வந்து  தரும் .  மருந்தின் தன்மை  தெரியாமல் சாப்பிட்டாலும் அது  நோயினை குணப்படுத்திவிடும். அது போல  'ராம  நாமா' வும்  சொல்ல சொல்ல  பிறவி  நோயை, துக்க நோயை ,ஆசை  என்ற   சம்சார நோயை அழித்துவிடும்.


ராமநாமம் நினைப்போம்! 
ராமநாமம் துதிப்போம்! ! 
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்!