Tuesday, 8 September 2020

விதுர நீதி 26 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

 விதுர நீதி 26


(விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்)


வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி



இந்த காலத்தில் நல்ல வேலைக் காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக  இருந்தாலும் சரி,  நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது.   மகாபாரத்தில் விதுரர் அப்போதே  வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று  கூறி விட்டார்.


வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு  வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை  குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.


வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன்  மீது கோபித்துக் கொள்ளக் கூடாது.  அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை  வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும்.


காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலை காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதை தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைகாரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடு என்றும் கூறி உள்ளார்.


எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ

எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை  செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ

எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ


இவ்வாறு வேலை காரர்களை  பற்றி  அழகாகக்  கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை பிறகு காண்போம்.