Sunday, 27 December 2020

சாந்தி கர்மா ( சதாபிஷேகம்…)

 சாந்தி கர்மா ( சதாபிஷேகம்…) 


#சாஸ்த்ரக் #கணக்கு:


விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.


“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |


பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |


தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”

ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.

“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே


தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |


ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே


பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||

மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.


ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,


ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8


=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).

விஞ்ஞானக் கணக்கு:


இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.


1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.


எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.


சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.

துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.


எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!


81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி)


ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் 


ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.


(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)


சதாபிஷேகச் சிறப்பு:


த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.