உழைப்பால் உயர்ந்தவர்கள் பிறந்த எண்ணை பற்றிய ஒரு ரகசியம்!
பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம்
எண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
8
பிறப்பில் உள்ள சில ரகசியங்களை தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். பிறந்த தேதியை வைத்து ஒருவரின் குணங்களை கூற முடியும். ஒருவரின் குணம், அவர்கள் அதிஷ்டம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்குப் பார்ப்போம். 8 (8, 17, 26)ல் பிறந்தவர் 8-ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 8-ஆம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார்.
குண நலன்கள் :
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் நிதானமாகவே செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும். நியாயம், அநியாயம் இவற்றை தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள்.
எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. பேச்சில் அழுத்த திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும். சொன்ன சொல் தவறாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். சிரித்து பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு.
எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள்.
அதிர்ஷ்டக் கல் :
சனியின் ஆதிக்கத்திற்குரியவர்கள் மட்டும் தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த நீலநிறக் கல்லை அணியக்கூடாது.
பரிகாரம் :
சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை :
அதிர்ஷ்ட தேதி - 8, 17, 26.
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு.
அதிர்ஷ்ட கிழமை - சனி, புதன்.
அதிர்ஷ்ட கல் - நீலம்.
அதிர்ஷ்ட தெய்வம் - ஐயப்பன்.
சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த எண்களிலுள்ள ரகசியங்களை அறிந்து கொண்டு பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்தால் அனைத்தும் வெற்றிகளாகவே அமையும்.