சூரிய பகவான் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் !!
பிரம்மதேவன் படைத்தல் தொழிலை மேற்கொண்டார். அப்போது படைத்தல் தொழிலுக்கு உதவியாக ஏழு சப்த ரிஷிகளைப் படைத்தார். அந்த சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசியும் ஆவார். மரீசியின் மகன் கசியபர் ஆவார்.
கசியபர் பல வேதங்களையும், உபநிடங்களும் கற்று பண்டித்துவம் பெற்று விளங்கினார். இவர் தட்சப் பிரஜாபதியின் பெண்களில் 13 பெண்களை மணந்து, இந்த பூவுலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து உயிர்களையும் படைத்தார்.
கசியவருக்கும் கற்புக்கரசியான அதிதிக்கும் பிறந்த குழந்தை தான் சு+ரியன். இந்த உலகினை ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவரும் இவரே. நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படும் கிரகம் சு+ரிய பகவானே, காரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு.
மேலும், மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும், அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும், சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்களாகும். சு+ரியன் சமுக்ஞை(உஷாதேவி), பிரபை, ரைவத இளவரசி ஆகிய மூன்று மனைவிகளை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களில் சமுக்ஞையிடம் அதிக பிரியம் கொண்டு இருந்தார். முதல் மனைவியான சமுக்ஞை பட்டத்து ராணியாக திகழ்ந்தார்.
சூரியனுக்கும், சமுக்ஞைக்கும் வைவ சுதமனு, எமன் ஆகிய 2 மகன்களும், யமுனை என்னும் மகளும் பிறந்தனர். சூரியனிடம் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும்படி பலமுறை சமுக்ஞை சொல்லியும் சூரியன் குறைத்துக் கொள்ளவில்லை.
ஒரு நிலையில் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேற எண்ணிணார் சமுக்ஞை. தான் இல்லாத இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய நிழலைக் கொண்டு தன்னைப் போன்ற ஒரு பெண்ணை படைத்தார். அந்த பெண்மணியே சாயாதேவி ஆவார்.
சமுக்ஞை, சாயாதேவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். ஆரம்பத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இன்றி சூரியனிடமும், சமுக்ஞையின் பிள்ளைகளிடம் உண்மையான மனைவி மற்றும் தாயாக நடந்துக் கொண்டாள்.
நாளடைவில் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் சாவர்ணி, சனி என்ற பிள்ளைகளும், தபதி, விஷ்டி என்ற பெண்களும் பிறந்தனர். தன் பிள்ளைகளிடம் அதிக அன்பை காட்டிய சாயாதேவி, சமிக்ஞையின் பிள்ளைகளிடம் மாற்றான் தாய் போல் நடந்து கொள்கிறார்.
- நவகிரகமான சூரியனின் வரலாற்றில் என்ன நடந்திருக்கும் என நாளை காண்போம்...