Friday, 27 October 2017

வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்?

வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்? - ஜோதிடர் பதில்கள்!

1. வாழ்க்கையில் வெற்றி பெற, எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
✳ தொழிலில் வெற்றி பெற பெருமாளை வணங்க வேண்டும்.

✳ எதிரிகளை வெல்ல வராகியை வணங்க வேண்டும்.

✳ உடல் நலம் பெற தன்வந்திரியை வணங்க வேண்டும்.

✳ எல்லா வளங்களையும் பெற, அவரவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

2. ஏன் குழந்தை பிறப்பதற்கு முன் தாடி வைக்கவேண்டும் ?
✳ கரு உருவான ஐந்தாவது மாதத்தில் இருந்து குழந்தையின் தந்தை மொட்டை அடித்தல், சவரம் செய்தல் போன்ற செயல்களை செய்யக்கூடாது.

✳ இது அவரவர் குல வழக்கம் மற்றும் சுய விருப்பத்தைச் சார்ந்தது.

✳ தாடி வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

3. ராகு திசை விலகும் போது என்ன பலன்களை தரும்?
✳ ராகு திசை ஆரம்பிக்கும் போது செல்வத்தை கொடுத்து இருந்தால், முடியும் போது விரயத்தை கொடுப்பார்.

✳ ராகு திசை ஆரம்பிக்கும் போது விரயத்தை கொடுத்து இருந்தால், முடியும் போது செல்வத்தை கொடுப்பார்.

4. பூரட்டாதி 3-ம் பாதம் நட்சத்திரத்திற்கு எந்த வயதில் அரசு வேலை கிடைக்கும்?
✳ முழுமையான ஜாதகத்தை கொண்டு தான் எந்த வயதில் கிடைக்கும் என்று தெளிவாக கூற இயலும்.

✳ பூரட்டாதி 3 பாதம் கும்ப ராசி ஆகும். ராசிக்கு 10ம் வீடு செவ்வாய் வீடாக வருவதால் கண்டிப்பாக அரசு உத்தியோகம் உண்டு.

✳ செவ்வாய் நீச்சமோ அல்லது பகை பெற்றாலோ பதவியின் தரங்கள் குறையும்.

5. வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா?
✳ வீட்டில் குருவி கூடு கட்டுவது நல்லது.

✳ குருவி கூடு கட்டுவது தனிக்குடும்பம் ஒன்றிணைந்து கூட்டு குடும்பமாக மாறும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

✳ குருவி கூட்டை கலைப்பது பொருளாதார வீழ்ச்சி மற்றும் குடும்பப் பிரிவினையை குறிக்கிறது.