Friday, 27 October 2017

அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா? கண்டுபிடிப்புகள் !!

அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா?
கண்டுபிடிப்புகள் !!
🔅 பல்பை எடிசன் கண்டுபிடிச்சார்,

📻 ரேடியோவை மார்கோனி கண்டுபிடிச்சார்,

🔌 கரண்டை பாரடே கண்டுபிடிச்சார்,

📞 போனை க்ராஹhம் பெல் கண்டுபிடிச்சார்,

🚲 பை-சைக்கிளை மேக் மில்லன் கண்டுபிடிச்சார்,

எக்ஸாம் கண்டுபிடிச்சவன் மட்டும் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!! 😬😬


அட இதுக்கு இது தான் அர்த்தமா ?
ஒவ்வொரு திருமணத்தின்போதும், மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை கண்டிப்பாக புரோகிதர் கூறுவார் !!

புரோகிதர் : மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா.... கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம்.... இதனுடைய அர்த்தம் தெரியுமா ?....

மனிதன் : தெரிஞ்சா நாங்க ஏன்டா இப்படி இருக்கோம் 😲 😲 !!!

புரோகிதர் : இது புனிதமான கயிறை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். நீ எல்லாவித நலன்களும், சிறப்புகளும் பெற்று நு}று வயது வாழ்வாயாக என்று, மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது.


👀 நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா.. ? 👀


👀கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது.

👀கண் இமைகள் தான் கண்கள் உலர்ந்து போவதில் இருந்து காக்கின்றது.


👀இமைகளின் விளிம்பில் 20-30 வரை சுரப்பிகள் உள்ளன.

👀கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை அலம்புகின்றன.
👀கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது.

👀கண்ணீர் விடும்போது கண் விழியின் மேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வருகிறது. இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.


👀ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 தடவைகள் கண்களை சிமிட்டுகிறார்.


👀சராசரியாக 5 செகன்டுக்கு ஒருமுறை இமைகள் சிமிட்டுகின்றன.

👀ஒரு நிமிடத்துக்கு 5-30 தடவைகள் கண் சிமிட்டப்படுகிறது விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன.

👀மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது. எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை.


☺ கொஞ்சம் நக்கல் ☺

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட சிம் கார்டு போட்டு பேச முடியாது.

காக்காவுக்கு கடன் தொல்லை அதிகமானவுடன் தன் குஞ்சுகளை அடகு வைத்தது. ஏன்? ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.

ஆண்கள் இன்னும் 5 நிமிடத்தில் வீட்ல இருப்பேன் என்று சொல்வதும், பெண்கள் இன்னும் 5 நிமிடத்தில் ரெடி ஆயிடுவேன் என்று சொல்வதும் ஒன்றுதான்.