விளக்கு ஏற்றும் திசைகளும், எண்ணெயின் பலன்களும்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி.
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்.
வடக்கு - திருமணத்தடை அகலும்.
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்.
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.
வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு விளக்கேற்ற
கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்க வல்லவை இந்த
எண்ணெயின் தீபங்கள்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா
மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட
விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ
அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக
செய்துள்ளனர்.
விளக்கேற்றும் திசைகள் :
எண்ணெயின் பலன்கள் :