கோகுல கண்ணனை கனவில் கண்டால் என்ன பலன்?
1. கோகுல கண்ணன், சிவலிங்கம் மற்றும் கருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

கோகுல கண்ணன், சிவலிங்கம் மற்றும் கருடனை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செயல்கள் கூடிய விரைவில் நடைபெறும்.
2. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தேள் கடிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு விரும்பிய செயல் விரைவில் நடைபெறும்.
3. புதுத்துணி வாங்குவதற்காக கடைக்குச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

புதுத்துணி வாங்குவதற்காக கடைக்குச் செல்வது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
4. வாகனத்தில் செல்லும்போது விபத்து நடந்து தலையில் அடிபட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்டு செயல்படுத்தும் செயல்களை பற்றி நன்கு ஆராய்ந்து முடிவு எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.
5. பைக் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பைக் காணாமல் போவது போல் கனவு கண்டால் செய்யும் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
6. தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.