Sunday 5 July 2020

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை. | ஆன்மிக செய்திகள் / Bhakthi Vlog

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை.


  • திருநீறு, விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்ற பல பெயர்களை உடையது திருநீறு. ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதனால் திருநீறு; பஸ்மம்.
  • விமேலான; பூதிஐஸ்வர்யம். மேலான ஐஸ்வர்யத்தை தருவதால் விபூதி. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால் பசிதம். ஆன்மாக்களின் மல மாசினைக் கழுவுவதால் சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும்  நீக்கி  ரட்சிப்பதனால் ரட்சை.
  • ""நீறில்லா நெற்றி பாழ்'' என்று அவ்வையார் கூறுகிறார். திருநீற்றை அன்புடன் பூசுவோர், எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதோர்  நோய்வாய்ப்பட்டு செத்துப்பிறந்து உழலுவார்கள்.


  • "நோய்களுக்கும் அஞ்சேன்; பிறப்புக்கும், இறப்புக்கும் அஞ்சேன்; திருநீறு பூசாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன்'' என்கிறார் பாண்டிநாட்டு முதலமைச்சராகிய மாணிக்கவாசகர்.
  • மனிதனுக்கு மிகவும் தேவையானவை ஐந்து பொருட்கள். 1. நல்வாக்கு. வாக்கு செல்வாக்குடையதாகவும், இனிமையுடையதாகவும் அமைதல் வேண்டும். 2. இனிய பால்சோறு. 3. நல்லார் இணக்கம். 4. உயர்ந்த நற்குணங்கள். 5. குறைவில்லாத செல்வம். இந்த ஐந்தும் ""சிவாய நம'' என்று ஜெபித்து திருநீறு தரிப்பதனால் எளிதில் கிட்டும்.
  •  திருநீற்றை ஒருவருக்குத் தரும்போதும், நம் பூசிக்கொள்ளும்போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்தக் காரணத்தினால் திருநீற்றுப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.